கரப்பந்தாட்ட League சுற்றுப்போட்டி T22

கரப்பந்தாட்ட League சுற்றுப்போட்டி T22
Ever shine விளையாட்டு கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட League சுற்றுப்போட்டி T22 எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 5 நாட்களாக தொடர்ச்சியாக மட்டக்களப்பு சந்திரா லெனில் அமைந்துள்ள Ever shine மைதானத்தில் மாலை 4 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்டுவோருக்கு முதலாவது பரிசாக 40 ஆயிரம் ரூபாவுடன் வெற்றிக்கிண்ணம் உட்பட ஏனைய வெற்றியாளர்களுக்கு 25 ஆயிரம் 15 ஆயிரம் 10 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
மேலும் சான்றிதழ்கள் பதக்கங்கள் வெற்றிக்கிண்ணங்கள் என்பன சகல வீரர்களுக்கும் வழங்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்துடன் ஒரு அணியில் 6 பேர் மாத்திரமே விளையாட அனுமதிக்கப்டுவதுடன் இப்போட்டியில் 6 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களை 0778951626 0753429877 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு பெற முடியும் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.