வர்த்தகரை கடத்தி மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி கப்பம் பெற முயற்சி! கடத்தல் கும்பலை பொறிவைத்து மடக்கிய பொலிஸ்..

வர்த்தகரை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தியதுடன் கப்பம் பெறுவதற்கு முயற்சித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் காலை கல் எலிய என்ற இடத்தில் இடம்பெற்றள்ளது. கடை ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் வர்த்தகரை காரில் கடத்திச் சென்றுள்ளது.
பின்னர் வர்த்தகரின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து வர்த்தரை கடத்தியதாக கூறியதுடன் ஒரு தொகை பணத்தை கப்பமாக கோரியுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் வர்த்தகரின் மனைவி பல்லேவெல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
பின்னர், குறித்த கப்பம் கோருபவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பல்லேவெல பொலிஸார் ஆரம்பித்தனர்.
அதற்கமைய, பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தலின்படி, குறித்த தொழிலதிபரின் மனைவி, கப்பம் கோரும் கும்பலின் உரிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, தேவையான பணத்தை தரலாம் எனக் கூறியுள்ளார்.
பின்னர் கப்பம் கோரிய பணத்துடன் கடவத்தை நகருக்கு வருமாறு தொழிலதிபரின் மனைவியிடம் கொள்ளைக் கும்பல் தெரிவித்துள்ளது.
பல்லேவெல பொலிஸ் மற்றும் மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் குழு வர்த்தகரின் மனைவியுடன் கப்பம் கோருபவர்கள் கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு கறுப்பு நிற காரில் கப்பம் கோரிய கும்பல் கடவத்தை நகரில் உள்ள மேற்கூறிய இடத்திற்கு வந்தனர்.
அதன்படி, தொழிலதிபரின் மனைவி கப்பம் கோருபவர்களுக்கு தேவையான பணத்தை கொடுக்கும் போது, அருகில் இருந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு கொள்ளைக் கும்பலை மடக்கிப் பிடித்தனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் 3 பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட வர்த்தகர் கடுமையாக தாக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுபோவில
மற்றும் நுகேகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.




