யாழ்.உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி!! -வெற்றி பெற்றது வலி.கிழக்குபிரதேச சபை-
உள்ளூராட்சிவாரத்ததை முன்னிட்டு வல்வெட்டுத்துறை நகரசபை யாழ்.மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான மென்பந்து சுற்றுபோட்டியின் வெற்றிக் கிண்ணத்தை வலி.கிழக்குபிரதேச சபை தனதாக்கிக் கொண்டது.
இத்தொடரின் இறுதிப்போட்டியில் வலி.கிழக்குபிரதேச சபை அணியும், வலி.தெற்கு பிரதேச சபை அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற வலி.தெற்குபிரதேச சபை முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்து ஆடிய வலி.கிழக்குபிரதேச சபை அணி 5 ஓவர்கள் நிறைவில் 79/1 என்ற ஓட்டங்களை பெற்றது.
இதனைத்தொடர்ந்து 80 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வலி.தெற்கு பிரதேச சபை அணி 4.1 ஓவறில் அனைத்துவிக்கட்களையும் இழந்து 61 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்நிலையில் 18 ஓட்டங்களால் வலி.தெற்கு பிரதேச சபை அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது வலி.தெற்குபிரதேச சபை அணி.