சமூக வலைத்தளங்களில் வெளியான ஆசிரியையின் நடன காணொளி, விசாரணை அறிக்கையை வெளியிட்ட மாகாண கல்வி அமைச்சு..

பெண் ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் நடனமாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணை அறிக்கையினை மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டுச் செயற்பாட்டின்போதே குறித்த ஆசிரியை மற்றும் மாணவியர் நடனமாடியுள்ளனர்.
இதன்படி, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தின்போது
பாடசாலை ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் நடனமாடும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.




