நடிகர் ஆனார் ஷிகர் தவன்!!
இந்திய 50 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவரும், இளம் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் டபுள் எக்ஸ்எல் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவை படமான இதில் தமிழில் காலா, வலிமை படங்களில் நடித்த ஹீமா குரைஷி நடித்திருக்கிறர். தமிழ் நடிகர் மகத் ராகவேந்திரா இந்த படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.
சட்ரம் ரமணி இயக்கம் இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். முழுநீள நகைச்சுவை படமான இது எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி வெளிவருகிறது. 'இந்தப் படத்தில் சொல்லப்படும் கருத்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்துக்கு அழகான செய்தியை கொடுக்கும் படம் என்பதால் நடிக்க சம்மதித்தேன்' என்கிறார் ஷிகர் தவன்.