SuperTopAds

வாய்க்கால் தகராறினால் வைத்தியர் வீட்டின் முன்னால் துப்பாக்கி சூடு! மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கைது..

ஆசிரியர் - Editor I
வாய்க்கால் தகராறினால் வைத்தியர் வீட்டின் முன்னால் துப்பாக்கி சூடு! மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கைது..

தண்ணீர் வழிந்தோடுவதற்கு அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் தொடர்பான வாய்த்தர்க்கம் முற்றியதில் மருத்துவரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் மகரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இந்த நபர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மகரகமை தொகுதியில் போட்டியிட்டு, 

மேல் மாகாண சபைக்கு தெரிவான முன்னாள் உறுப்பினராவார். மருத்துவர் நிர்மாணித்து வரும் வீடு காரணமாக தண்ணீர் வழிந்தோடும் கால்வாய் தடைப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் குறித்த நபரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து தண்ணீர் வழிந்தோட ஏற்பட்டுள்ள தடையை சரி செய்யுமாறு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களிட்ம் கூறியுள்ளார். எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால், 

ஆத்திரமடைந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மேலும் சிலருடன் சில தினங்களுக்கு பின்னர் அங்கு சென்று வேலை செய்து வந்தவர்களை திட்டியுள்ளதுடன் வீட்டின் நுழைவாயில் கதவு 

மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதனையடுத்து பொலிஸார் முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்துள்ளனர்.

Radio