SuperTopAds

3.1 கோடி ரூபாய்க்கு 2 வாகனங்களை கொள்வனவு செய்த 20 வயதான இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
3.1 கோடி ரூபாய்க்கு 2 வாகனங்களை கொள்வனவு செய்த 20 வயதான இளைஞன் கைது!

சுமார் 3.1 கோடி ரூபாய்க்கு இரு வாகனங்களை வாங்கிய குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

65 இலட்சம் ரூபா மதிப்புள்ள வேன் மற்றும் 2.5 கோடி ரூபா பெறுமதியான ஜீப் என்பவற்றை கொள்வனவு செய்த 20 வயதுடைய இளைஞனே கைதாகியுள்ளார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இவர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக தனது தந்தை சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தியே குறித்த இளைஞர் வாகனங்களை கொள்வனவு செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Radio