பந்துவீச்சாளரை பிடியெடுக்க விடாமல் தடுத்த மேத்யூ வேட்!! -இங்கிலாந்து - அவுஸ்ரேலியா போட்டியில் நடந்த சர்ச்சை சம்பவம்-
இங்கிலாந்து - அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையே மூன்று ரி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ரி-20 போட்டி அவுஸ்ரேலியா பெர்த் நகரத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இப் போட்டியில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியா அணி துடுப்பெடுத்தாடிய போது ஆட்டத்தின் 17 ஆவது ஓவரை மார்க் வுட் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 3 ஆவது பந்தை மேத்யூ வேட் தூக்கி அடிக்க முயன்ற போது துடுப்பு மட்டையின் விழிம்பில் பட்ட பந்து மேல் எழுந்து பந்துவீச்சாளர் பிடியேடுக்கும் சந்தர்ப்பமாக மாறியது.
இதன் படி மார்க் வுட் அந்த பந்தை பிடியெடுக்க முற்பட்டார். இருப்பினும் மாறுபுறம் மேத்யூ வேட் பாதி களத்திற்கு ஓட்டம் எடுக்க முயன்றுவிட்டு ஆட்டமிழந்துவிடுவேனோ என்ற அச்சத்தில் மீண்டும் தன் இடத்திற்கு திரும்பினார்.
அப்போது மார்க் வுட்டை பிடியேடுக்க விடாமல் இழுத்துப்பிடித்து தடுத்தார். இதனால் அங்கு பிடியெழுப்பு சந்தர்ப்பம் இல்லாமல் போனது. இங்கிலாந்து வீரர்கள் இதற்கு ஆட்டமிழப்பு கோரினர். இருப்பினும் நடுவர் அதனை நிராகரித்தார்.
பந்துவீச்சாளர் பிடியெடுக்க சென்று போது எப்படி ஒருவர் தடுத்து நிறுத்து முடியும். இது கிரிக்கெட் விதிகளுக்கு புறம்பானது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேத்யூ வேட் பிடியேழுப்பதை தடுத்த தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.