நாட்டு மக்களுக்கு புகைரத திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..! விசேட பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை..
புகைரதங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டியுள்ள புகைரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே, இது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கப்பட்டு அவசர பாதுகாப்பு நடைமுறை அமுல்ப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, புகைரதம் மோதியதால் ஸ்தம்பிதமடைந்திருந்த வடக்கு புகைரத பாதையின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. காங்கசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற உத்தர தேவி நகரங்களுக்கு இடையேயான கடுகதி ரயில் நேற்று (08) தம்புத்தேகம மற்றும் செனரத்கம நிலையங்களுக்கு அருகில் தடம்புரண்டது.
இதன் காரணமாக நேற்று முதல் அனுராதபுரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்த ஒடிசி விசேட ரயிலை மஹவ பகுதியில் ரயில்வே அதிகாரிகள் நிறுத்த வேண்டியிருந்தது. அதன்படி, அந்த ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பேருந்துகள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக
ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.