வடமாகாணத்தில் 12ம் திகதிவரை கனமழை தொடரும்! யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி விரிவடைவதால் வடமாகாணத்தின் பல பகுதிகளில் கனமழை செய்யும் வாப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.
நேற்று 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை இந்த கனமழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் எனவும் அவர் தொிவித்திருக்கின்றார்.