யாழ்ப்பாணம் - தமிழகம் இடையே விமான சேவைகள் ஆரம்பம், கட்டணமும் குறைவாம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - தமிழகம் இடையே விமான சேவைகள் ஆரம்பம், கட்டணமும் குறைவாம்..!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும். என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் குறைவான விமானக் கட்டணங்கள் வடமாகாண மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இதேவேளை, விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு