SuperTopAds

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலி, மேலும் 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலி, மேலும் 3 பேர் படுகாயம்..

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் பலியானதுடன், மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

மேற்படி கோர விபத்து இன்று அதிகாலை கொழும்பு - பேருவளை மொரக்கல்ல சுற்றுலா பொலிஸாருக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 

பேருவளை பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட, உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்க கஸ்தூரியாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மோட்டார் சைக்கிளில் கான்ஸ்டபிளுடன் வந்து கொண்டிருந்த போது, ​​எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

படுகாயமடைந்த நால்வர் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். 

பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio