யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது சரமாரி வாள்வெட்டு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது சரமாரி வாள்வெட்டு..!

யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. 

சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (06) இரவு கொக்குவில் பகுதியில் இருந்து அச்சுவேலியில் உள்ள தனது வீடு நோக்கி முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் 

அவரை வழிமறித்து வாளினால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு