SuperTopAds

கணவனை பார்க்க சிறைக்குச் சென்றிருந்த மனைவி கைது!

ஆசிரியர் - Editor I
கணவனை பார்க்க சிறைக்குச் சென்றிருந்த மனைவி கைது!

சிறைச்சாலையில் உள்ள கணவனுக்கு ஹெரோயின் கொண்டு சென்ற மனைவி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் பூசா சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரான மனைவியை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் லலித் பத்திரன உத்தரவிட்டார்.

அம்பலாங்கொட, மஹருப்ப வீதியில் வசிக்கும் 32 வயதான பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இப் பெண் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவனுக்கு வழங்கவென கொண்டு வந்த பார்சலில் இருந்த காற்சட்டைப் பையில் ஹெரோயின் இருந்ததை சிறைக் காவலர்கள் கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Radio