SuperTopAds

4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டண நிலுவை வைத்திருப்போரின் இணைப்புகள் துண்டிக்கப்படும்! மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டண நிலுவை வைத்திருப்போரின் இணைப்புகள் துண்டிக்கப்படும்! மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவிப்பு..

கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்கட்டண நிலுவை உள்ளோரின் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என குறித்த மாவட்டங்களுக்கு பொறுப்பான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

எனவே கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மின் பாவனையாளர்கள் மின் கட்டண நிலுவை 4000 ரூபாவுக்கு மேல் காணப்படுமாயின் உடனடியாக கட்டணத்தை செலுத்துமாறும். 

கட்டணம் செலுத்தப்படாமல் மின்துண்டிக்கப்பட்டால் செலுத்த வேண்டிய மின் கட்டணத்துடன் மீள இணைப்புக்காக 3000 ரூபாவையும் செலுத்த வேண்டும் என அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Radio