ஆயுள்வேத சிகிச்சை நிலையத்திற்குள் விபச்சார விடுதி! சுற்றிவளைத்த பொலிஸார், இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது..

ஆயுள்வேத சிகிச்சை நிலையத்திற்குள் இயங்கிவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கல்கிஸ்ஸ செரமிக் வீதியிலுள்ள இடமொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட குறித்த விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது விபச்சார விடுதியை நடத்தி வந்த 25 வயதுடைய ஆணும் இரண்டு இளம் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபில மற்றும் திஹகொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 25 மற்றும் 35 வயதுடைய இரண்டு யுவதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.




