SuperTopAds

பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை! DNA பரிசோதனையில் சிக்கிய நபர்..

ஆசிரியர் - Editor I
பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை! DNA பரிசோதனையில் சிக்கிய நபர்..

பாடசாலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கடந்த 2009ம் ஆண்டு தொடக்கம் தேடப்பட்டுவந்த நபர் DNA பரிசோதனையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த நபர் நேற்று எஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.2009 ஆம் ஆண்டு எஹலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 

பாடசாலைச் சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் எஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Radio