உலகெங்கும் பொலிஸ் நிலையங்கள் திறந்தது சீனா!! -தொழில் பயிற்சி வகுப்புகள் எனும் பெயரில் செயற்படுவதாக அதிர்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor II
உலகெங்கும் பொலிஸ் நிலையங்கள் திறந்தது சீனா!! -தொழில் பயிற்சி வகுப்புகள் எனும் பெயரில் செயற்படுவதாக அதிர்ச்சி தகவல்-

சீன அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுவோரை அடையாளம் காண்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக பொலிஸ் நிலையங்களை சீனா திறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கனடா, அயர்லாந்து உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த சட்டவிரோத பொலிஸ் நிலையங்களை சீனா திறந்துள்ளது. சீனாவின் பொலிஸ் துறையான, பி.எஸ்.பி எனப்படும் பொது பாதுகாப்பு வாரியத்தின் கீழ், இந்த பொலிஸ் நிலையங்கள் செயல்படுகின்றன. 

இதுவரை, 21 நாடுகளில், 30 பொலிஸ் நிலையங்களை சீனா திறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் ஏற்கனவே மனித உரிமை மீறல் அதிகமாக உள்ளது.

இதனால், மனித உரிமை மீறல் செயல்கள் அதிகரிக்கும் என, மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொழில் பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில், இந்த பொலிஸ் நிலையங்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு