SuperTopAds

தந்தையை அடித்துக் கொலை செய்து சடலத்தை எரிந்ததுடன், தாயை அடித்துக் காயப்படுத்திய போதைக்கு அடிமையான மகன்!

ஆசிரியர் - Editor I
தந்தையை அடித்துக் கொலை செய்து சடலத்தை எரிந்ததுடன், தாயை அடித்துக் காயப்படுத்திய போதைக்கு அடிமையான மகன்!

தந்தையை மண்வெட்டியால் அடித்தும், கத்தியால் வெட்டியும் கொன்று சடலத்தை எரித்ததுடன், தாயை தாக்கி காயப்படுத்திய மகன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் ஹோகந்தர வித்தியாராஜ மாவத்தை என்ற இடத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, 

சந்தேகநபரான மகன் தந்தையின் உடலை தீ வைத்து எரித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை தாய் அண்மையில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், 

தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.28 வயதுடைய சந்தேகநபரான மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தாயின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio