அமைச்சருடைய நண்பர்கள் என கூறியோர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு புகுந்து அட்டகாசம்! முகாமையாளர், ஊழியர் மீது தாக்குதல்..

அமைச்சர் ஒருவருடைய நண்பர்கள் என கூறிக்கொண்டு மஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்புநிலையமொன்றுக்கு வந்த குழுவினர் ஊழியர்கள் மற்றும் முகாமையாளரைத் தாக்கியுள்ளனர்.
க்யூஆர் பாஸ் இல்லாமல் தங்கள் வாகனத்துக்கு எரிபொருளைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைஅவர்கள் நிராகரித்ததை அடுத்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம்எரிபொருள் நிரப்பு நிலையத்தின் கமெராக்களிலும் பதிவாகியுள்ளது.




