SuperTopAds

கட்டுப்பாட்டை இழந்து கட்டிடம் ஒன்றுக்குள் புகுந்த புகைரதம்! சாரதி துாங்கிவிட்டதாக பொலிஸ் விசாரணையில் தகவல், விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து கட்டிடம் ஒன்றுக்குள் புகுந்த புகைரதம்! சாரதி துாங்கிவிட்டதாக பொலிஸ் விசாரணையில் தகவல், விசாரணைகள் தீவிரம்..

கட்டுப்பாட்டை இழந்த புகைரதம் கட்டிடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான நம்பவம் தெமட்டகொட புகைரத நிலையத்தில் இன்று இடம்பெற்றிருக்கின்றது. 

புகையிரத தளத்தில் பயணித்த குறித்த புகையிரதம் அங்கிருந்த பழைய கட்டிடம் ஒன்றின் மீது மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

புகையிரத சாரதி உறங்கியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து புகையிரத திணைக்களத்தின் ஊடாக உள்ளக விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


Radio