SuperTopAds

துப்பாக்கி முனையில் நடந்த முகமூடி கொள்ளை! பிரதேசசபை உறுப்பினர் கைது..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி முனையில் நடந்த முகமூடி கொள்ளை! பிரதேசசபை உறுப்பினர் கைது..

வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்றிருந்த வர்த்தகரிடமிருந்து 22.3 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Radio