ஆயுத முனையில் மருந்தகத்திற்குள் நுழைந்து கொள்ளை! இலங்கையில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள்..

மருந்தகம் ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் கொழும்பு - பன்னிப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டிருக்கின்றது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




