விசர் நாய் கடிக்கு இலக்கான 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு..!

விசர் நாய் கடிக்கு இலக்கான 2 வயதான குழந்தை நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி விசர்நாய் ஒன்று மேற்படி குழந்தையை கடித்துள்ளதுடன் அவரது வீட்டில் வீட்டு நாயையும் கடித்துள்ளது.
அந்த நாய் விசர் நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர்நாய்க்கடிக்கான தடுப்பூசி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து,
அவரது பெற்றோர் குழந்தையை நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று செப்டம்பர் 4, 7 மற்றும் 11 ஆம் திகதிகளில் 3 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
ஒரு தடுப்பூசி செலுத்த வேண்டிய இருந்த நிலையில், இதற்கிடையில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து செப்டம்பர் 21 ஆம் திகதி நிக்கவெரட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், குழந்தை கடந்த 23ஆம் திகதி உயிரிழந்தது.




