SuperTopAds

தன் பிறந்தநாளில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்றிருந்த மாணவன் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
தன் பிறந்தநாளில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்றிருந்த மாணவன் உயிரிழப்பு!

தன் பிறந்தநாளில் நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்றிருந்த 17 வயதான பாசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 

குறித்த சம்பவம் பயாகல கலமுல்ல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

ரண்முத்து டெரன் சில்வா என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

பயாகலை கலமுல்ல புனித அந்தோனி வீதி முனையிலுள்ள கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்தபோது மூவரும் திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது அருகில் இருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் குதித்து மாணவர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.

மற்றைய இரு மாணவர்களும் மரத்தடியில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர்களில் ஒருவரைக் காப்பாற்றும்போது 

மற்றைய மாணவன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Radio