கடத்தல்காரனாக மாறிய 23 வயது பிக்கு! தங்க பிஸ்கட்டுகள், நகைகள் மற்றும் நுாற்றுக் கணக்கான தொலைபேசிகளுடன் கைது..

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சுமார் 2 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுகள், நகைகள், நுாற்றுக்கணக்கான தொலைபேசிகளுடன் பிக்க ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து ஓமான், மஸ்கட் ஊடாக விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பிக்குவின் பயணப் பொதியில் இருந்து குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 225 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், தங்க பிஸ்கட்கள் மற்றும் தங்கத் கட்டிகள் போன்றவற்றை சந்தேகநபர் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பிக்கு 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து சந்தேகநபருக்கு அபராதம் விதித்த பின்னர் விடுவிக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




