SuperTopAds

பாடசாலை மாணவர்கள் 16 பேர் கைது! 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்கள் 16 பேர் கைது! 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்..

வனப் பகுதிக்கு தீ மூட்டிய குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

எல்ல வனப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

குறித்த தீ வைப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே பாடசாலை மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பதுளை, ஹாலிஎல மற்றும் நமுனுகுல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எல்ல வனப்பகுதியை பார்வையிட வரும் சிலர் குறித்த பிரதேசத்தை அழித்து வருவதாக எல்ல பிரதேச சபையின் தலைவர் மாலக பிரபாத் குறிப்பிட்டுள்ளார்.

Radio