பொலிஸ் உத்தியோகஸ்த்தரை வீதியில்போட்டு உருட்டி உருட்டி அடித்த மர்மநபர்கள் தப்பி ஓட்டம்! தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு வழங்கவில்லையாம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் உத்தியோகஸ்த்தரை வீதியில்போட்டு உருட்டி உருட்டி அடித்த மர்மநபர்கள் தப்பி ஓட்டம்! தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு வழங்கவில்லையாம்..

மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரை வீதியால் பயணித்த இருவர் வழிமறித்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்த்தரும் முறைப்பாடு வழங்காமல் சென்றிருக்கின்றார். 

குறித்த சம்பவம் திருகோணமலை வீதியலில் கருவலகஸ்வெவ விகாரைக்கு எதிரில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், பொலிஸ் சார்ஜன்டை வீதியில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றபோது அருகில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அதனை தடுக்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் இலங்கை பொலிஸ் திணைக்களம் வழங்கும் நீல நிற டி சேர்ட் மற்றும் காக்கி காற்சட்டையை அணிந்திருந்தார்.

ஏதோ ஒரு காரணத்திற்காக இரண்டு பேர் நீண்ட நேரமாக பொலிஸ் சார்ஜன்டை தாக்கியதாக குறித்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த ஒருவர் கூறியிருக்கின்றார். 

இதேவேளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மிகிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு பொலிஸாரை அனுப்பியுள்ளார். பொலிஸார் அங்கு சென்ற போது, சம்பவம் முடிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து ஏற்கனவே சென்று விட்டனர்.

மிகிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிக்கு அறிவித்திருந்த போதிலும் அவர் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை என மிகிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு