SuperTopAds

வடமாகாண சுகாதார பணிப்பாளர் நியமனம் தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை! விண்ணப்பங்களை கோரியுள்ளது..

ஆசிரியர் - Editor I
வடமாகாண சுகாதார பணிப்பாளர் நியமனம் தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை! விண்ணப்பங்களை கோரியுள்ளது..

வடமாகாண சுகாதார பணிப்பாளர் தேர்வுக்கான விண்ணப்பத்தை மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. 

பதில் சுகாதார பணிப்பாளராக திலீப் லியனகே கடமை ஆற்றிவரும் நிலையில் நிரந்தர சுகாதார பணிப்பாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதக்கு முன் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கும்படி சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. 

ஏற்கனவே நியமிக்கப்பட்ட பதில் சுகாதார பணிப்பாளர் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளதுடன், 

அவ்வாறான நியமனம் தொடர்பாக தமக்கு எதுவும் தொியாது என வடமாகாண ஆளுநர் குறிப்பிட நிலையில் 

தமிழில் தேசிய கட்சிகளும் வட மாகாணத்தில் தகுதியான சேவை மூத்த அதிகாரிகள் இருந்தும் நியமிக்கமை தொடர்பில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் சுட்டிக்காட்டின, 

இவற்றின் அடிப்படையில் புதிய சுகாதார பணிப்பாளரை நியமனம் செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.