சமந்தா முதல் இடத்தில்!!

ஆசிரியர் - Editor II
சமந்தா முதல் இடத்தில்!!

பிரபலமாக உள்ள பான் இந்தியா நடிகைகள் குறித்து நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரபலமான 10 நடிகைகள் பட்டியலில் சமந்தா முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

தமிழில் தயாராகும் படங்களை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று 'பான் இந்தியா' படங்களாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். இதுபோல் இந்தி, தெலுங்கில் தயாராகும் படங்களையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு வசூல் பார்க்கிறார்கள்.

இந்த பான் இந்தியா படங்களால் நடிகர், நடிகைகள் மொழி எல்லைகளை தாண்டி செல்வாக்கு பெற்று வருகிறார்கள். அனைத்து மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வருகின்றன. இதன் மூலம் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபலமாக உள்ள பான் இந்தியா நடிகைகள் குறித்து கருத்து கணிப்பு நடந்துள்ளது. இதில் பிரபலமான 10 நடிகைகள் பட்டியலில் சமந்தா முதல் இடத்தை பிடித்துள்ளார். 

சமந்தாவுக்கு அடுத்த இடங்களில் முறையே அலியாபட், நயன்தாரா, காஜல் அகர்வால், தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், கத்ரினா கைப், பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் உள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு