ஆட்டோ ஒன்றில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு..! ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்..

ஆட்டோ ஒன்றில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
குறித்த சம்பவம் பலப்பிட்டிய அஹிங்கல்ல போகஹபிட்டிய என்ற இடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் குறித்த மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,
அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றைய நபர் காயமடைந்த நிலையில், பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை எனவும்,
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 5 வெற்றுத்தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




