SuperTopAds

8 வயது சிறுமி மீது தொடர் பாலியல் துஷ்பிரயோகம்! தாயாரின் 2வது கணவன் கைது...

ஆசிரியர் - Editor I
8 வயது சிறுமி மீது தொடர் பாலியல் துஷ்பிரயோகம்! தாயாரின் 2வது கணவன் கைது...

8 வயதான சிறுமியை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் சிறுமியின் தாயாருடைய 2வது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மொரட்டுவ, ராவத்தவத்தை, பொல்கொடுவ வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் சமிந்த குமார (44) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி மாலை ஆங்கில வகுப்புக்கு சென்றபோது, ​​உடலில் கடுமையான வலி இருப்பதாக ஆங்கில ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

அதன்படி, ஆசிரியர் இது குறித்து தாயாரிடம் தெரிவித்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார்.

பின்னர், சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த தாய், நோய்க்கான காரணங்களை கேட்டறிந்த போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் நேற்று (21) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 

எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Radio