ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பலவீனமா!! -ஜெயவர்தனா தெரிவிப்பு-

ஆசிரியர் - Editor II
ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பலவீனமா!! -ஜெயவர்தனா தெரிவிப்பு-

உலக கோப்பை தொடரில் ரவிந்திர ஜடேஜா இல்லாதது இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் இழப்பாக அமையும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயர்வர்தனா தெரிவித்துள்ளார். 

இருப்பினும் இந்திய அணிக்கு  பும்ராவின் வரவு வரப்பிரசாதமாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அவுஸ்திரேலியாவில் 8 ஆவது ரி-20 உலக கோப்பை தொடர் ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் சகலதுறை ஆட்டக்காரர் ரவிந்திர ஜடேஜா இடம் பெறவில்லை. 

இவ்விடயம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்தனா கூறியது:-

இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில்  5 ஆவது இடத்தில் ஜடேஜா பொருத்தமானவராக இருந்தார். ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து அணிக்கு கைகொடுத்தார். இருவரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் என்பதால், பேட்டிங்கில் வலு சேர்த்தனர். 

தற்போது உலக கோப்பை தொடரில் ஜடேஜா இல்லாதது பெரும் இழப்பு தான். நல்ல 'பார்மில்' இருந்தார். துடுப்பாட்டம், பந்துவீச்சில் கைகொடுக்க கூடியவர். இவர் சிறந்த இடது கை துடுப்பாட்டவீரர் என்பதால், சில மாற்றங்களை செய்தாக வேண்டும். 

துடுப்பாட்ட வரிசையில் 4 அல்லது 5 ஆவது இடத்திற்கு தினேஷ் கார்த்திக்கை நீக்கி விட்டு, ரிஷாப் பன்ட்டை களமிறக்க வேண்டும். இதனால் கீப்பர் தேர்வில் குழப்பம் ஏற்படும். பும்ராவின் வரவு இந்தியாவுக்கு வரமாக  அமைந்துள்ளது என்றார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு