ஐ.சி.சி ரி-20 உலகக் கிண்ணம்!! -இலங்கைக் குழாம் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
ஐ.சி.சி ரி-20 உலகக் கிண்ணம்!! -இலங்கைக் குழாம் அறிவிப்பு-

ஐ.சி.சி ரி-20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் இத் தொடரில் விளையாடவுள்ள இலங்கையின் 15 வீரர்களைக் கொண்ட குழு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியினரே உலகக்கிண்ண குழுவிலும் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணிக்கு தசுன் சானக்க தலைமை தாங்குகிறார்.

அணி விபரம் வருமாறு:-

தசுன் சானக்க (அணித் தலைவர்), தனுஷ்க குணதிலக, பெதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், சரித்த அசலங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மகேஸ் தீக்சன, ஜெப்ரி வண்டர்சே, சாமிக கருணாரத்ன, துஷ்மந்த சாமிர,  லகிரு குமார, டில்சான் மதுசங்க, பிரமோத் மதுசான் ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதைவிட அசேன் பண்டார, பிரவீன் ஜயவிக்கிரம, டினேஷ் சந்திமல், பின்னுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் தயார் நிலையில் உள்ள வீரர்களாக இலங்கை குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு