ரஷ்ய ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி!! -அதிர்ச்சி தகவலால் பரபரப்பு-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது கொலை முயற்சி நடந்துள்ளதாகவும், இருப்பினும் அக் கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. போர் ஆரம்பித்ததில் இருந்தே, ரஷ்ய ஜனாதிபதியின் உடல் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில், புடினை கொல்ல முயற்சி நடந்ததாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, 'ஈரோ வீக்லி நியூஸ்' என்ற ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சென்ற காரின் முன்பக்க இடது சக்கரம் மீது தாக்குதல் நடந்துள்ளது. இருப்பினும், புடினின் கார் நிலைமையை சமாளித்து வேகமாக சென்று விட்டது. இந்த தாக்குதலில், புடினுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.