இன்றுவரை திறக்கப்படாமல் உள்ள மகாராணி எலிசபெத் எழுதிய கடிதம்!! -தொடரும் இரகசியம்-

ஆசிரியர் - Editor II
இன்றுவரை திறக்கப்படாமல் உள்ள மகாராணி எலிசபெத் எழுதிய கடிதம்!! -தொடரும் இரகசியம்-

மறைந்த மகாராணி எலிசபெத் எழுதிய கடிதமொன்று இன்றுவரை திறக்கப்படாமல் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.

இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் திகதி தனது 96 ஆவது வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். இந்நிலையில் சூழ்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் நிலையில் அவரால் எழுதப்பட்ட கடிதமொன்று குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி அவர் அவுஸ்திரேலியாவிற்கு சென்றபோது எழுதிய கடிதமொன்று அங்குள்ள ஒரு கட்டடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி விக்டோரியா கட்டடத்தில் குறித்த கடிதம் ரகசியமாக பூட்டி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த கடிதமானது 1986 ஆம் ஆண்டு நவம்பரில் ராணியால் எழுதப்பட்டதாக கூறப்படுவதுடன், அந்தக் கடித உறையில், 2085 ஆம் ஆண்டில் இந்த கடித உறையைப் பிரித்து சிட்னி நகர மக்களுக்கு தான் எழுதியதை கூற வேண்டும் என எலிசபெத் வலியுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சுமார் 16 முறை அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருப்பதாகவும், அங்குள்ள மக்களுடன் அவர் நெருங்கிய நட்பை பேணியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு