SuperTopAds

8 வருடங்களின் பின் ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!!

ஆசிரியர் - Editor II
8 வருடங்களின் பின் ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!!

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது.

சிங்கப்பூரில் நேற்று பிற்பகல் நிறைவுபெற்ற ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சிங்கப்பூரை வீழ்த்தி இலங்கை ஆசிய கிண்ணத்தை 6 ஆவது தடவையாக சுவீகரித்திருந்தது.

இதன் மூலம் ஓரே நாளில் இரண்டு ஆசிய கிண்ணங்களை வென்றெடுத்து இலங்கை வரலாறு படைத்தது. 

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பானுக்க ராஜபக்ஷ அபாரமாகத் துடுப்பெடுத்தாடி குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம், வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டம், ப்ரமோத் மதுஷானனின் 4 விக்கெட் குவியல் என்பன ஆசிய கிண்ணத்தை இலங்கை சுவீகரிப்பதற்கு பெரிதும் உதவின.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.