வடமாகாண சுகாதார பணிப்பாளராக வைத்திய நிபுணர் திலீப் லியனகே பொறுப்பேற்றார்! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை காற்றில்..
வடமாகாண சுகாதார பணிப்பாளராக வைத்திய நிபுணர் திலீப் லியனகே நேற்றய தினம் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
இதுவரை மாகாண சுகாதார பணிப்பாளராக கடமையாற்றிய வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாகாண சுகாதார பணிப்பாளராக நியமனம் பெறுவதற்கு தகுதியானவர்கள் வடக்கிலிருக்கும்போதும் வெளிமாவட்டத்திலிருந்து வரவழைக்கப்படுவது ஏன்?
ஜனாதிபதி இந்த நியமனங்களை மறுபரிசீலணை செய்யவேண்டும் என இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தபோதும் வழங்கப்பட்ட நியமனத்தில் மாற்றமில்லை.