திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு விடு திரும்பிய பேருந்து கோர விபத்தில் சிக்கியது! 18 பேர் படுகாயம், 6 போின் நிலை கவலைக்கிடம்..

திருமண நிகழ்வுக்கு சென்று திரும்பிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயமடைந்த நிலையில் 6 போின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென கூறப்படுகின்றது.
இந்த விபத்து இன்று ககாலை வலப்பனை மஹ ஊவா பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
காயமடைந்தவர்கள் வலப்பனை பிரதேச வைத்தியசாலை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
அவர்கள் பலத்த காயமடைந்த 6 பேர் நுவரெலியா பொதுராகலை - வலப்பனை பிரதான வீதியில் வலப்பனை மஹ ஊவா பகுதியில் இன்று (30) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து குழுவொன்று வருகைதிருந்த பேருந்து ஒன்றே,மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்தபோது,
வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பேருந்தின் தடுப்பு தொகுதியில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.