ஆசிய கோப்பை தொடர்!! -ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்-

ஆசிரியர் - Editor II
ஆசிய கோப்பை தொடர்!! -ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்-

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதவுள்ளன. 

முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது.

வங்காளதேச அணியை பொறுத்தமட்டில் அண்மைக்காலங்களில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் 20 ஓவர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கும் ஷகிப் அல்-ஹசனுக்கு இது 100 ஆவது 20 ஓவர் சர்வதேச போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க லீக் ஆட்டத்தில் வென்ற நம்பிக்கையுடன் களம் காணும் ஆப்கானிஸ்தான் அணி 2 ஆவது வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்குள் நுழைய ஆர்வம் காட்டும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகுவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு