பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளே நீக்கம்!! -பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை-
ஜ.பி.எல் ரி-20 தொடரில் விளையாடிவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்பிளே ஐ.பி.எல் தொடரில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக 2020 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அதன் பின் நடந்த 3 சீசன்களிலும் அவ்வணி பிளே-ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.
2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் அந்த அணி 6 ஆவது இடமே பிடித்தது. அணியின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி அடைந்து இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்தினர், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு செய்துள்ளனர்.
புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் நடவடிக்கையில் இறங்கி இருக்கும் பஞ்சாப் அணி நிர்வாகம் விரைவில் புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.