SuperTopAds

உயிழந்த நடிகை சோனாலி போகத்தின் உடலில் பல காயங்கள்;!! -பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்-

ஆசிரியர் - Editor II
உயிழந்த நடிகை சோனாலி போகத்தின் உடலில் பல காயங்கள்;!! -பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்-

மர்மமான நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நடிகை சோனாலி போகத்தின் உடலில் பல காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

பா.ஜ.க.வில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய செயல் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர் 42 வயதான நடிகை சோனாலி போகத் கடந்த 22 ஆம் திகதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறுpனர். 

சோனாலியின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என சோனாலியின் சகோதரி குற்றச்சாட்டு எழுப்பினார்.

2016 ஆம் ஆண்டு அரியானாவில், பண்ணை வீட்டில் இருந்து சோனாலியின் கணவர் சஞ்சய் போகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் சோனாலியின் மரணத்திலும் மர்மம் உள்ளது என அவரது சகோதரி குற்றச்சாட்டு கிளப்பியுள்ளார்.

சோனாலி உயிரிழப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு உள்ளார். அவரது மறைவு பற்றிய பல்வேறு தொடர்புடைய சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

நடிகை சோனாலி போகத் மறைவு இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்தது.

இதுபற்றி சோனாலியின் 15 வயது மகள் யசோதரா நேற்று கூறும்போது, எனது தாயாருக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்த வேண்டிய அவசியமுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.