வீதியால் சென்ற பெண்ணின் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு ஓடிய இராணுவ சிப்பாய்! துரத்திப் பிடித்த பொதுமக்கள்..

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு ஓடிய இராணுவ சிப்பாயை பொதுமக்கள் மடக்கி பிடித்து கவனித்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கனகராயங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியினை
சிவில் உடையில் வந்த இராணுவச் சிப்பாய் என சந்தேகிக்கப்படும் ஒருவர் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற வேளையில், போக்குவரத்து பொலிசாரின் உதவியுடன் விரைந்து செயற்பட்ட அப்பகுதி பொதுமக்கள்,
தாலிக்கொடி அறுத்த நபரை துரத்திப் பிடித்துள்ளனர். இவ்வாறு பறித்துச்சென்றவர் சிவில் உடையில் நடமாடிய இராணுச் சிப்பாய் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களால் கனகராயன்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா கனகராயங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.