SuperTopAds

நல்லுார் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
நல்லுார் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவில் தேர் திருவிழா இன்று காலை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழாவில் இம்முறையும் வழமைபோன்று லட்சோப லட்சம் அடியவர்கள் பங்கேற்பர். வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக் கணக்கானோர் நல்லூரானை தரிசிக்க வருகை தந்துள்ளனர். 

அதனால் திருடர்களின் கைவரிசை அதிமாக இருக்கும். எனவே ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வீட்டில் ஒருவராவது தங்கியிருக்கச் செய்யவேண்டும் அல்லது பாதுகாப்பாக வீட்டை மூடி ஆலயத்துக்குச் செல்லவேண்டும். வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட்டு அடியவர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் தமது தங்க நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.

இயன்றளவு நகைகளை அணிவதைக் குறைப்பதுடன் பணத்தை எடுத்துவருவதைத் தவிர்க்கவேண்டும். பெருமளவு பொலிஸார் பொலிஸார் உற்சவ காலக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ள போதும் பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவேண்டும் என்றார்.