நல்லுார் ஆலய சுற்றாடலில் மக்கள் மத்தியில் அதிக சத்தம் எழுப்பும் கோண்களை ஊதிக் கொண்டு அலைந்து திரிந்தவர்களை எச்சரித்த பொலிஸார்! கோண்கள் பறிமுதல்..

ஆசிரியர் - Editor I
நல்லுார் ஆலய சுற்றாடலில் மக்கள் மத்தியில் அதிக சத்தம் எழுப்பும் கோண்களை ஊதிக் கொண்டு அலைந்து திரிந்தவர்களை எச்சரித்த பொலிஸார்! கோண்கள் பறிமுதல்..

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் சுற்றாடலில் பொதுமக்கள் மத்தியில் அதிக சத்தம் எழுப்ப கூடிய கோண்களை ஊதிக் கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த இளைஞர்களை எச்சரித்த பொலிஸார் அவரிகளிடமிருந்து கோண்களை பறித்துச் சென்றிருக்கின்றனர். 

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருவிழாவிற்கு வருகை தருவோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தம் விதமாக சிலர் நடந்து கொள்வது குறித்து பல தரப்பினரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி கடும் விசனமும் தெரிவித்துடன்,

உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆலய மகோற்சவ திருவிழாக்களின் விசேட திருவிழாக்கள் அடுத்த வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிகளவானோர் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனால் ஆலய சூழலில் விரும்பத்தகாத செயல்கள், குற்றசெயல்கள், ஆலயத்திற்கு வருகை தருவோருக்கு இடையூறு ஏற்படுத்தல் போன்றவற்றை தடுக்கும் நோக்குடன் பெருமாளவான பொலிஸார் சிவில் உடைகளில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆலய சூழலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை உற்சவத்தின் போது, ஆலயத்திற்கு வந்திருந்தோர் மத்தியில் அதிக சத்தத்தை எழும்பும், கோர்ண்களை ஊதியவாறு சென்ற இளைஞர் குழுவொன்றை சிவில் உடையில் நின்ற பொலிஸார் மடக்கி பிடித்து, விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் 

அவர்களிடம் இருந்த கோர்ண்களை பறிமுதல் செய்து, அவர்களை கடுமையாக எச்சரித்து விடுத்தனர். அதேவேளையில் மதுபோதையில் யாசகர்கள் சிலர் ஆலய சூழலில் யாசகம் பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாசகர்கள் சிலரையும் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது யாசகர் ஒருவரின் உடமையில் இருந்து , தொடுதிரை கைபேசி (ஸ்மார்ட் போன்) ஒன்றினை மீட்டிருந்தனர். கைபேசி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், கைபேசியை கையளித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு