செல்வாக்குள்ளவர்களின் இடமாற்றத்தை தடுக்க முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளர் முயற்சி! முறைகேடுகள் மலிவான இடம் வடக்கு கல்வித்துறை...

ஆசிரியர் - Editor I
செல்வாக்குள்ளவர்களின் இடமாற்றத்தை தடுக்க முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளர் முயற்சி! முறைகேடுகள் மலிவான இடம் வடக்கு கல்வித்துறை...

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று முல்லைத்தீவு கலைமகள் வித்தியாசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கு வட்டுவாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், வலய கல்விப் பணியாளர் தன் வலயத்திலுள்ள கணக்காளரின் சகோதரியை இடமாற்றத்திலிருந்து பாதுகாப்பதற்கு குறித்த ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது முதலாவது நியமனத்தைப் பெற்று முல்லைத்தீவு கலைமகள் வித்தியசாலையில் கல்வி கற்பித்து வருகின்றார். கடந்த 3 வருடங்கள் குறித்த பாடசாலையில் பணியாற்றிய அவருக்கு தற்போது உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

கலைமகள் வித்தியசாலையில் ஒரு பாடத்திற்கு 3 ஆசிரியர்கள் உள்ள நிலையில் 5 வருடங்களுக்கும் மேலாக அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் முல்லைத்தீவை சேர்ந்த ஒரு ஆசிரியை இடமாற்றம் எதுவுமில்லாமல் அங்கே இருக்கின்றார். எனவே இடமாற்ற நடைமுறையின்போது அவர் இலகுவாக உட்படுவார் என்பதாலும், 

வலயக் கல்வி பணிமனையில் பணியாற்றும் கணக்காளர் ஒருவருடைய சகோதரியே குறித்த ஆசிரியை என்பதாலும் மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பை சார்ந்தோர் குற்றஞ்சாட்டுகின்றனர். 

மேலும் குறித்த பாடசாலையில் ஒரு பாடத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்கள் இருந்தால் ஏன் அதே பாடசாலையில், அதே பாடத்திற்கு அடுத்தடுத்து ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும்? முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்தங்கிய பல பகுதிகளில் ஆசிரியர்கள் போதாமை உள்ள நிலையில் மேலதிக ஆசிரியர்களை வலய கல்வி பணிப்பாளர் 

ஒரு பாடசாலையில் வைத்திருந்தது ஏன்? அல்லது வலய கல்விப் பணிப்பாளர் தமது அலுவலக கணக்காளரை திருப்திப்படுத்த நினைக்கிறாரா? அப்படியாயின் அது ஏன்? என பாதிக்கப்பட்ட தரப்பை சார்ந்தவர்கள் கேள்வி எழுப்புவதுடன், குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் ஆசிரியர் ஒருவருக்கு 2 மாத சம்பவத்தை விடுவிக்கவில்லை, 

என பாதிக்கப்பட்ட ஆசிரியர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு