SuperTopAds

யாழ்.மாவட்டத்திலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு குறிப்பாக கொழும்பு செல்லும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு தங்குமிடம் மற்றும் கழிப்பறை வசதிகளை இரத்மலானை இ.போ.ச டிப்போவிலும் வேறு சில டிப்போக்களிலும் வழங்க ஒழுங்கு செய்யப்படும். என அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியிருக்கின்றார். 

யாழ்ப்பாணத்துக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகைதந்திருந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன யாழ்ப்பாணம் டிப்போவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின்போது, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன்போது யாழ்.டிப்போ எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பாக அமைச்சு கேட்டறிந்து கொண்டார். பழுதடைந்துள்ள பேரூந்துகள் பிராந்திய டிப்போக்களை சேர்ந்த இயந்திரவியலாளர்கள், திருத்துநர்களால் திருத்தப்படுவதை ஊக்குவிப்பதாகவும், 

தேவையான பற்றறிகள், டயர்களை பெறுவது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், பணியாளர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாகவும், வெளிமாவட்டங்களுக்கு 

குறிப்பாக கொழும்பு செல்லும் சாரதிகள், நடத்துனருக்கான தங்குமிட கழிப்பறை வசதிகளை இரத்மலான டிப்போவிலும் ஏனைய டிப்போக்களிலும் செய்து கொடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.