SuperTopAds

வடமாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை பராமரிப்பதற்கு விசேடமான திட்டம் ஒன்றை வகுக்கும்படி ஆளுநர் ஜீவன் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை பராமரிப்பதற்கு விசேடமான திட்டம் ஒன்றை வகுக்கும்படி ஆளுநர் ஜீவன் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு..!

வடமாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கண்காணிப்பதற்காக விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் உள்ள வயதான முதியவர்கள் உடல் உள ரீதியில் பல்வேறு சவால்களை எதிர் கொள்கின்றனர். ஆரோக்கியம் குன்றுதல், மன நலம் பாதிப்பு பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் முதியவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக வயது முதிர்ந்தோரின் அவர்களால் தமது அன்றாட கடமைகளைச் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர் பலமின்மை உடற் சமநிலையின்மை பார்த்தல் கேட்டல் திறன்கள் குறைவடைதல்

மற்றும் நடமாடும் திறனின்மை சுறுசுறுப்பின்மை எலும்புகள் எளிதில் முறிவடைதல் போன்றவற்றைக் குறிக்கும். வயது முதிர்வு சார்பான நோய்களான ஞாபக மறதி இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மூட்டுக்கள்தேய்வடைதல் 

மற்றும் எலும்புகள் பலம் குன்றுதல் நீரழிவு புற்றுநோய் பாரிசவாதம் சமிபாட்டுகுறைபாடு உடற் பருமன் மற்றும் நீணட கால நோய்களால் அவர்களது செயற்திறன் குறைவடைதலை எதிர் கொள்கின்றனர்.

இவற்றைவிட ஆபத்தான குடும்ப சமூகப் பாதிப்பு மனஉழைச்சல்போன்றனவும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் சாராச் சவால்களாகும். இதற்காக வடமாகாணத்தில் முதியோரின் தேவைகளைக் கணிப்பிடுவதற்கான முன்னோடி ஆய்வு 

இதுவரை முறையாகஅடையாளப்படுத்தப்படாத நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை அடையாளப்படுத்தும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட வுளது. வடமாகாண ஆளுநரின்அறிவுறுத்தலுக்கமைய 

வடமாகாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மாற்றும் வடமாகாண சமூகசேவைத் திணைக்களம் என்பன இணைந்தவழி நடாத்தலின் கீழ் இடம்பெறவுள்ளது. இவ் ஆய்வானது முதியோர் வாழும் சமூகத்தில் அவர்களது சுகாதார சமூகத் தேவைகளைக் கண்டறிந்து

அவற்றை எவ்வகையிற் தீர்க்க முடியும் என்ற வழிவகைகளை ஆராய்வதாகும். உற்சாகமாக முதுமை எய்திய முதியோர் நீண்ட காலம் கௌரவமாக வாழ தரம்மிகு வாழ்வை அடைவதனூடாக அவர்களை மேம்படுத்தவும் ஆளுநர் விரும்புகின்றார்.

இதற்காக விஷேடமாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் உரிய அலுவலர் ஊடாக நேர்காணல் மூலம்வினாக் கொத்துக்களைப் பூரணப்படுத்தித் தேவையான பரப்பில் விபரங்களைச் சேகரிக்கவுள்ளார்.

வினாக்கொத்தானது சமூகம் தொடர்பான விபரங்கள் உணவு உறையுள் குடிநீர் தொடர்பான அடிப்படைத் தேவைக்குரியதகவல்களையும் முதியோரின் உடல் உள ஆரோக்கிய நிலைமை தொடர்பிலும் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.