நாடு திரும்புகிறார் கோட்டபாய ராஜபக்ஸ! மிரிஹானவில் உள்ள வீட்டில் அதியுச்ச பாதுகாப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு திரும்புகிறார் கோட்டபாய ராஜபக்ஸ! மிரிஹானவில் உள்ள வீட்டில் அதியுச்ச பாதுகாப்பு..

ஜனாதிபத கோட்டபாய ராஜபக்ஸ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மிரிஹான பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின்  இல்லத்தை சூழவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவரது இல்லம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் அவரது வருகை அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர் அரசியல் மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.அதன்படி அவர் நாட்டுக்கு வருகைதரும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு