தீர்மானம் எடுத்த பின்னர் எனக்கு அறிவித்தல் மட்டும் வழங்கினார்! அவர் அப்படி செய்திருக்க கூடாது, கோட்டபாய ராஜபக்ஸ குறித்து மனம் திறந்த மஹிந்த..

ஆசிரியர் - Editor I
தீர்மானம் எடுத்த பின்னர் எனக்கு அறிவித்தல் மட்டும் வழங்கினார்! அவர் அப்படி செய்திருக்க கூடாது, கோட்டபாய ராஜபக்ஸ குறித்து மனம் திறந்த மஹிந்த..

நான் நாட்டைவிட்டு தப்பிச் செல்லவா? என கோட்டபாய ராஜபக்ஸ ஆலோசனை கேட்டிருந்தால் நாட்டைவிட்டு தப்பி ஓடவேண்டாம். என்றே கூறியிருப்பேன். ஆனால் தீர்மானத்தை எடுத்துவிட்டு எனக்கு ஒரு அறிவித்தலையே வழங்கினார். அதனால் நான் எதனையுமே கூறவில்லை. என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். 

சண்டே டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளர்நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு அதனை கட்சியே தீர்மானிக்கவேண்டும் அவ்வாறு இல்லாவிட்டாலும் நான் ஒரு சட்டத்தரணி என்னால் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணிபுரிய முடியும் தேவையென்றால் அதனை செய்ய தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் தனது சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச குறித்த கேள்விக்கு அவர் தான் செய்துமுடித்திருக்கவேண்டிய விடயத்தை செய்து முடித்திருக்கவேண்டும் ஆனால் அவர் அரசியல்வாதியில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து தப்பியோடுவது குறித்து உங்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டாரா என்ற கேள்விக்கு எனக்கு அவர் அது குறித்து தெரிவிக்கவில்லை என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். 

கோத்தாபாய ராஜபக்ச சென்றிருக்ககூடாது எனவும் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச இலங்கையிலிருந்து வெளியேற தீர்மானித்ததும் நான் போகின்றேன் என அவர் குறிப்பிட்டார் நான் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நான் போகலாமா என கோத்தபாய ராஜபக்ச என்னை கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு கோத்தபாய ராஜபக்ச மாத்திரம் காரணமால்ல முன்னைய அரசாங்கங்களும் நானும் கூட அதற்கு காரணம் பதில் கூறவேண்டும். 

எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச தான் நம்பிய ஆலோசகர்களின் ஆலோசனைப்படி செயற்பட்டார் ஆகவே அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தமுடியாது பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டவேளை அவர் சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தினார்.

இஜனாதிபதியாக அவர் கடும் அழுத்தங்களை சந்தித்தார் அவர் முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்டார் தற்போது மென்மையானவராக மாறிவிட்டார் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அவர் அதனை செய்திருக்க கூடாது ஆனால் அவர் அரசியல்வாதியல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தன் முன் காணப்பட்டபணிகளை சரியாக பூர்த்தி செய்திருக்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு